நாகர்கோவில் – நவ – 26,
கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பொன்மனை அடுத்த பெருஞ்சாணி குடியிறுப்பு பகுதியில் 13 அடி நீளம் உள்ள ராஜநாகம் பாம்பு நுழைந்துள்ளதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி வேளிமலை வனச்சரக அலுவலர் இராஜேந்திரன் வழிகாட்டுதலின் படி வேளிமலை சரக பணியாளர்களால் ராஜநாகம் பத்திரமாக பிடிக்கப்பட்டு வீரப்புலி காப்பு காடு அடர்ந்த வனப் பகுதியில் பகுதியில் பத்திரமாக கொண்டு விடுவிக்கப்பட்டது.