சென்னை, ஆகஸ்ட் 27 –
காக்னிசண்ட் அறக்கட்டளை சமீபத்தில் விஷன் எம்பவர் மற்றும் ஹெல்ப் தி பிளைண்ட் ஃபவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் “ஸ்டெம்” கற்றல் முன்னேற்றம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தியது.
அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் அடங்கிய கல்வி முறை “ஸ்டெம்” என்பதின் விரிவாக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில் காக்னி சண்ட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் பிரபு, பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் எம். கலைச்செல்வி மற்றும் விஷன் எம்பவர் மற்றும் ஹெல்ப் தி பிளைண்ட் ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
காக்னிசண்ட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி தீபக் பிரபு தெரிவித்ததாவது: “ஸ்டெம்” திட்டம் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதை உலகிற்கு தெரியபடுத்துவதே இச்சந்திப்பின் நோக்கமாகும். சிறப்புப் பள்ளிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியைப் பற்றி விவாதிக்கும் போது பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று டிஜிட்டல் திறன்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றலில் உள்ள சிரமங்களை பற்றி அவர் கூறினார்.
இந்த இடைவெளிகளை நிரப்ப காக்னிசண்ட் அறக்கட்டளை உதவியுடன் விஷன் எம்பவர் மற்றும் ஹெல்ப் தி பிளைண்ட் ஃபவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் முழுவதும் உள்ளடக்கிய ஸ்டெம் கல்வியை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் 7,200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 3,800 ஆசிரியர்கள் அணுகக்கூடிய கற்றல் வளங்கள் மற்றும் ஹெக்ஸிஸ் (எலக்ட்ரானிக் பிரெய்ல் ரீடர்) மற்றும் ஐரிஸ் (தொட்டுணரக்கூடிய வரைபடங்களுக்கான ஆடியோ தொழில்நுட்பம்) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயனடைகிறார்கள் என்றார்.
மேலும் கடந்த 20 வருடங்களாக காக்னிசண்ட் அறக்கட்டளையின் ஏராளமான சாதனைகளையும், ஹெல்த் 4 ஆல் மற்றும் ஃபியூச்சர் 4 ஆல் ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் மேற்கொண்ட கூடுதல் முயற்சிகளையும் தீபக் பிரபு விளக்கி கூறினார்.



