பல்லடம், ஆகஸ்ட் 08 –
திருப்பூர் மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமைத் தொகை, பட்டா சிட்டா, வீட்டு வரி, இலவச மருத்துவம் மற்றும் முதியோர் உதவித்தொகை, பெயர் மாற்றுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மனுவாக எழுதிக் கொடுத்தனர். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்
க. செல்வராஜ் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், முருகோஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் அசோகன், ஜேசிபி பாலுச்சாமி, பூமலூர் சீனிவாசன், பி.கே. கனகராஜ், சிவாச்சலம், இளைஞர் அணி அமைப்பாளர் லோகு பிரசாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் திமுக கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக இந்த முகாமில் பங்கேற்றனர்.