மார்த்தாண்டம், ஆக. 4 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனையம், புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை ஆகிய மீனவ கிராமங்களில் தலை சுமடு மூலம் மீன் வியாபாரம் மீனவ பெண்கள் தங்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு வசதியாக அலுமினிய சருவங்கள் வாங்கி தர வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரிடம் விடுத்த கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தனது சொந்த நிதியிலிருந்து கீழ்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சியில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி இலவச அலுமினிய சருவங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகர், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் ஆஸ்கர் பிரடி, பால்மணி, டைட்டஸ், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோர்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.