கோவை, ஜூலை 31 –
கோவை மாவட்டம் புலியகுளம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சித்துறை ரா. அன்பரசி வரவேற்புரையில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனுஷ்மிதா செபாஸ்டியன் முன்னிலையிலும் நடைபெற்ற தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் இலக்கிய விழா நடைபெற்றது.
இதில் கல்லூரி நூலகத்திற்கு உண்மை உறங்கும் நேரம் கவிதை நூல்களை வழங்கிய கவிஞர் பொன்சிங் இந்நிகழ்ச்சியில் சீர்திருத்தச்செம்மல், தொலைநோக்குச் சிந்தனையாளர் – கலைஞர் என்ற தலைப்பில் கோவை கே. சம்பத் அவர்களும்
பார் போற்றும் பன்முகப் படைப்பாளி-கலைஞர் என்னும் தலைப்பில் முகில் தினகரன் அவர்களும் பொழிவுரையாற்றினர்.
தமிழ்துறை இணைப் பேராசிரியர் க. ராஜா, இணைச் செயலாளர் முத்தமிழ்வாணர் ப. ஆறுமுகம், தமிழ் துறை இணை பேராசிரியர் கோ. புவனேஸ்வரி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.