மதுரை, ஜூலை 31 –
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் கவிஞர் இரா. இரவி, சிறிய புஷ்பம், எஸ்தர் ராணி, சந்திரிகா, இஸபெல் திலகரணி, முருகேசன், சப்ரா பீபி, முருகையன், பரமானந்தம், ஆவல் பீர், புனிதா பாஸ்கர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகளை வழங்கி சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.