தஞ்சாவூர், ஜூலை 30 –
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி அன்று ஜெனிவா ஒப்பந்த நாள் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து 76-வது ஆண்டு ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 05-08-2025 அன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. ரெட் கிராஸ் மற்றும் அதன் இன்றைய முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், தற்கொலை தடுப்பு மற்றும் போதை பொருள் நுகர்வு தடுப்பு என்ற தலைப்பில் பேச்சுப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிற்கு ஒருவர் வீதம், நான்கு போட்டிகளுக்கு நான்கு மாணாக்கர்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெறுபவர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணாக்கர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரியின் முதல்வர்களும், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்களும் தங்களது கல்லூரியில் இருந்து மாணக்கர்களை போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தக்க ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய 9894030046 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகவலை பாரதிதாசன் பல்கலைக்கழக மாவட்ட யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் முருகானந்தம் தெரிவித்தார்.