காரியாபட்டி, ஜூலை 29 –
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பாக மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அணு விஞ்ஞானி டாக்டர் APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது புகழை போற்றும் வகையில் பொதுமக்களுக்கு மா, மருத, நாவல் போன்ற 300 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல் ஆய்வாளர் விஜய காண்டீபன், தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகேசன் ஆகியோர் பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். இந்த நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் வாசு, நகர துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.