சங்கரன்கோவில், ஜூலை 27 –
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தென்காசி வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி அறிவுறுத்தலின் படி சங்கரன்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் முன்னெடுப்பின் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் தினேஷ், சதீஷ்குமார், வீரமணிகண்டன், கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வீரா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் மாணவர் மன்றம் சரவணகுமார் மற்றும் மாணவரணி வெங்கடேஷ், ஹரிஹரசுதன்,
சொர்ணபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.