புதுக்கோட்டை, ஜூலை 25 –
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் கம்பன் கழக 50-வது ஆண்டு விழாவில் நான்காவது நாள் நிகழ்வில் திருச்சி மாநகர முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பங்கேற்று தலைமை உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து கம்பன் கழக துணைத் தலைவர் பேக்கரி மகாராஜ், அருள்ராஜ் சின்னப்பா ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வின் போது மீனால் முருகப்பன், ஆதி காலத்து அலங்கார மாளிகை ஜெயபால், புதுக்கோட்டை ரோட்டரி கிளப் தலைவர் இளங்கோ கிங் செல்வி துரைமணி, மாமன்ற உறுப்பினர் ஜாபர் பர்வேஸ், மகாத்மா காந்தி கல்வி நிறுவனங்கள் என். முகமது நாசர் சிவ திருமேனிநாதன் கட்டுநர் சங்கத் தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் கம்பன் காட்டும் பெண்கள் பழமையின் வார்ப்புகளா புதுமையின் ஈர்ப்புகளா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.