வேலூர், ஜூலை 24 –
வேலூர் மாவட்டம் வேலூர் கண்ணா ஹோட்டலில் உள்ள லயா ஹாலில் ஜூபிடர் டிராவல் எக்ஸிபிஷன் மற்றும் கிராண்ட் இந்தியா டிராவல் மார்க்கெட் (ITME) நிகழ்ச்சி TAAI முன்னாள் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் ஜூபிடர் டிராவல் எக்ஸிபிஷன் மேலாண்மை இயக்குநர் ஆர். வெங்கடாசலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
வேலூர் சுற்றுலா அலுவலர் திரு. பி. இளமுருகன், தமிழ்நாடு ADTOI தலைவர் பி. அசோக் குமார் மற்றும் செயலாளர் லயன் என். பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். “இந்திய பயணத் துறையை சர்வதேச நிலைக்கு உயர்த்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகின்றன” என்று கூறினார். ஜூபிடர், எதிர்வரும் நகரங்களில் கூடுதல் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.