மார்த்தாண்டம், ஜூலை 23 –
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அடைக்காக்குழி 2-வது வட்டார மாநாடு அடைக்காக்குழி அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. குளோரி பாய் கொடியேற்றினார். வட்டார தலைவர் கெப்சி மேரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெகுபதி துவக்கவுரை ஆற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கனக பாய், முன்னாள் ஊராட்சி தலைவர் ரெஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
15 பேர் கொண்ட புதிய வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக கெப்சி மேரியும் செயலாளராக தீபா மற்றும் பொருளாளராக ரெஞ்சிதம் ஆகியோரை கொண்ட புதிய வட்டார குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தலைவர் மேரி ஸ்டெல்லா பாய் நிறைவுரை ஆற்றினார்.