சோழவந்தான், ஜூலை 22 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்மாய் பாசனத்துக்கு உட்பட்ட வெள்ளச்சந்து பகுதியில் தென்னந்தோப்புக்குள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் விவசாய நிலங்களில் கீழே கிடப்பதால் விவசாய வேலைகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குறுக்கும் நெடுக்குமாக தென்னந்தோப்பிற்குள் மின்சார வயர்கள் பாதுகாப்பற்ற முறையில் கீழே விழுந்து கிடக்கிறது. மேலும் தென்னந்தோப்பிற்குள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு முறைகேடாக மின்சாரம் கடத்தப்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆகையால் மின்சார துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து முறைகேடாக மின்சாரம் கடத்துவது தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை கடத்தப்பட்ட மின்சாரங்களுக்கு உரிய தொகையை வசூல் செய்ய வேண்டும். மேலும் விவசாயப் பகுதியான தென்னந்தோப்பிற்குள் பாதுகாப்பற்ற முறையில் செல்லும் மின்சார வயர்களை அப்புறப்படுத்த வேண்டும். உயிர் பலி ஏற்படும் முன் விவசாயிகளின் உயிரை பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் மின் துறை உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.