கோவை, ஜூலை 22 –
பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் அமைந்துள்ள ஐ.டி.எம் நர்சிங் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் அவர்களின் சாதனைகள் மற்றும் நிர்வாக திறன்களை மாணவர் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் பொறியாளர் சரவணன், முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முனைவர் அபு. இக்பால், திமுக நிர்வாகி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலை வைத்தார். மேலும், கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.