நாகர்கோவில், ஜூலை 14 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியான டதி மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன் முதல் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி வரை உள்ள இடதுபுறம் சாலை மிக குறுகிய சாலை ஆகும். எனவே இந்த சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வண்ணம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை ஒரு வழிப்பாதை என்பது இரு வழி பாதையாக மாறி வருகிறது.
இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் விபத்தும் அவ்வப்போது நடைபெற்று வந்ததால் இப்பகுதி சாலையில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்துத்துறை காவலர்கள் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஒரு வழி பாதையை தவறாக பயன்படுத்தி வந்த வாகனங்கள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் அனைவருக்கும் அபராதம் விதித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.