வேலூர், ஜூலை 11 –
வேலூர் மாவட்டம் ஆயர் குல யாதவர் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஜெயந்தி விழா 268-வது குரு பூஜை மற்றும் படத்திறப்பு விழா வேலூர் பழைய மாநகராட்சி அருகில் மாவட்ட தலைவர் ஜி.கே. கங்காதரன் தலைமையிலும் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.ஜி. ரமேஷ், மாவட்ட பொருளாளர் சி.பி. சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் கலந்து கொண்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் .
உடன் அதிமுக மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் சி.கே. தேவேந்திரன், கவுன்சிலர் டீட்டா சரவணன், தொழிலதிபர்கள் சி.கே. கணேசன், வி.ஜி. துளசிராமன், முத்து கணேஷ், ஜி.ஜி.ஆர். கோகுல், ஜி.ஜி.ஆர். தமிழ்மணி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.