வேலூர், ஜூலை 10 –
வேலூர் சதுப்பேரி கே.எச்.ஷு கம்பெனி அருகில் எஸ்.எஸ்.எஸ். பேட்மிட்டன் அகாடமி திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாநகர சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், திமுக மாவட்ட அவைத் தலைவர் தணிக்கை குழு உறுப்பினர், தி.அ. முகமது சகி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். உடன் திமுக கஸ்பா பகுதி கழக செயலாளர் முகமது முனைவர் பாஷா , அனைத்து மலர் வியாபாரிகள் சங்கம் செயலாளர் லயன் கே. முத்துகணேசன், திமுக மாநில துணைச் செயலாளர் சிறுபான்மை பிரிவு நூருல்லா, எஸ்.எஸ்.எஸ். பேட்மிட்டன் அகாடமி உரிமையாளர்கள் சையத் நதீம பாஷா, சையத் அலி அஹமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.