விழுப்புரம், ஜூன் 30 –
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் முத்தம்பாளையம் ஏரியினை தன்னார்வலர்களுடன் நீர்வளத்துறை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது நீர்நிலைத் துறை உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், ஊரக வளர்ச்சித் துறை உதவி பொறியாளர் அசோக்குமார், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் செல்வமூர்த்தி, கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலர் செல்வி பவித்ரா, எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகரன், தமிழ்நாடு அரசு நீர் நிலை பாதுகாவலர் மணிகண்டன் உட்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.