வாடிப்பட்டி, ஜூன் 28 –
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் இணைந்து கண்ணதாசன் 98-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்புகளில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். இதில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித்
தலைமை ஆசிரியர் விஜயரங்கன், இலக்கிய மன்ற துணைச் செயலாளர் தங்கராசு, நூலகர் அருள் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவைத் தலைவர் கவிஞர் பொன் பனகல் பொன்னையா வரவேற்றார். விழாவில் வழக்கறிஞர் செல்வகுமார் காலத்தை வென்ற கவிஞர் என்ற தலைப்பில் பேசினார்.
இதில் பேரவை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், போட்டோ பாபு, கௌரிநாதன் மது பாலாஜி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மன்ற பொருளாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் நன்றி கூறினார்.