ஈரோடு, ஜூன் 26 –
மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் ஈரோட்டுக்கு நேற்று வந்தார். கருங்கல் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த வட மாநிலத்தவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார். இதை வரவேற்று வடமாநிலத்தவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
சுந்தரேஷ் தந்தை வி.கே. முத்துசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டுக்கு மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் சென்றார். அங்கு வி.கே. முத்துசாமியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், நீதிபதி சுந்தரேஷ் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் ஈரோடு பெரியார் நகரில் சி. சரஸ்வதி எம்.எல்.ஏ. வீட்டுக்கு மத்திய மந்திரி சென்றார். அங்கு அவரது மகள் கருணாம்பிகை மறைவையொட்டி ஆறுதல் கூறினார்.