பூதப்பாண்டி ஜூன் 1
குமரி மாவட்டம் தடிக் காரன் கோணத்தை அடுத்துள்ள
கீரிப்பாறை வாழையத்துவயல் பகுதியில்
கனமழையினால் பாதிக்கப்பட்ட
200க்கும் மேற்ப்பட்டமலை கிராம
மக்களுத்கு நிவாரண உதவிகளை
கலப்பை மக்கள் இயக்க நிறுவனத்
தலைவர் பி.டி. செல்வக்குமார் வழங்கினார்.
குமரிமாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கீரிப்பாறை, வாழையத்து வயல் உட்பட மலை கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரப்பர் பால் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீடுகள் இடிந்து வெறும் இன்னல்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தனர். அவர்களது கஷ்டங்களை அறிந்து நேரில் சென்று அவர்களுக்கு அத்தியவாசியான பொருட்களான அரிசி பைகள் மற்றும் மளிகை பொருட்களை கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வக்குமார் 200 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், ஒருங்கினணப்பாளர் கிராஸ் கல்லூரி தாளாளர் அருள்ராஜ், நாகர்கோவில் மாநகராட்சி
இயக்க அமைப்பாளர் ஆனந்த் மற்றும்
செந்தில் என பலரும் கலந்து கொண்டனர்.