நித்திரவளை, மே.29-
கிள்ளியூர் கடற்கரை கிராமம் பூத்துறை பகுதியை சேர்ந்தவர் யோகன்னான் (34). இவர் மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது உறவினர் பைக்கில் நித்திரவிளை பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக எதிர் திசையில் இருந்து வந்த ஒரு பைக், யோகன்னான் சென்ற பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் யோகன்னானுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.