மார்த்தாண்டம் மே 29
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனரக லாரிகளால் நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் அறிவுரையின் பேரில் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசாரின் சார்பில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதத்தில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மார்த்தாண்டத்திற்கு வரும் நேரம் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எந்த காரணத்தாலும் உள்ளே வரக்கூடாது. மேலும் அதிக வேகத்தில் செல்லக்கூடாது. எந்த காரணத்தாலும் அதிக பாரம் ஏற்றக்கூடாது. கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளால் விபத்துகள் ஏற்படக்கூடாது, மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.