காஞ்சிபுரம் மே 25
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழா ஒட்டி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணையில் வாரணவாசி ஊராட்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் மற்றும் கைப்பந்து போட்டி தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலை தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசாக 50,000 ரூபாய் மட்டும் பரிசு கோப்பையும், இரண்டாம் பரிசாக 30,000 ரூபாய் மட்டும் பரிசுக்கோப்பையும், மூன்றாம் பரிசாக 20,000 ரூபாய் மற்றும் பரிசுக்கோப்பையும், நான்காவது பரிசாக 10,000 ரூபாய் மற்றும் பரிசு கோப்பை ஆகியவற்றுடன் ஆறுதல் பரிசையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதை,தொடர்ந்து உடனிருந்து செயல்பட்ட துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றதாகவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மினி ஸ்டேடியம் உருவாக்க வேண்டும் என்றும், ஏறத்தாழ 70 மினி ஸ்டேடியம் மே-5ஆம்தேதி அன்று காணொளி காட்சி மூலமா அடிக்கல் நாட்டியதாகவும், மிகப்பெரிய விஷயமாக தற்போது வாரணாசியில் சஞ்சய் காந்தி அவர்கள் 50 மேட்ச், 96 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களை பாராட்டியதாகவும் அவர்கள் ஐபிஎல் டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் பங்கேற்று ஆர்வமாக விளையாட வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது வாலாஜாபாத் ஒன்றிய சேர்மன் ஆர்.கே.தேவேந்திரன், ஒன்றிய துணை சேர்மன் சேகர், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன் மற்றும் திமுகவினருடன் அங்கு வந்திருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களிடம் திமுக அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்க புத்தகத்தையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் வாலாஜாபாத் பேரூர் இளைஞர் அணி செயலாளர் சுகுமாரன், பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.வி.சுரேஷ், அய்யம்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் சுந்தரமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்எஸ்கே.சத்யா, குன்னவாக்கம் தலைவர் குப்புசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.