மதுரை மே 10
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு,
மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன்,
ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 15 மேல்நிலைப்
பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில்,
2024-2025 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் மொத்தம் 2091 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியதில் 1954 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநகராட்சி பள்ளிகள் 93.45 தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளது. இதில், முதலிடத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார். மாநகராட்சி மேல்
நிலைப்பள்ளி 99.33 சதவீதமும், இரண்டாம் இடத்தில் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்
நிலைப்பள்ளி 98.18 சதவீதமும், மூன்றாம் இடத்தில் மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.87 சதவீதமும் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்ற மாணவி ஜி.மலர்விழி, (மொத்த மதிப்பெண் 590) ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடம் பெற்ற மாணவி கே.பி.சுவேதா ரத்னா (மொத்த மதிப்பெண் 584) வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பெற்ற மாணவி ஜி.நிவாஷ்னி (மொத்தம் மதிப்பெண் 583) ஈ.வெ.ராநாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகள், முதல் மூன்று இடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் பாடம் வாரியாக 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 36 மாணவ, மாணவியர்களையும் மேயர், ஆணையாளர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில்,
கல்விக்குழுத்
தலைவர் ரவிச்சந்திரன், துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், கல்விப்
பிரிவு கண்காணிப்பாளர் வீரபால முருகன், தலைமை ஆசிரியர்கள், கல்விப்
பிரிவு பணியாளர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
+2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குமேயர் பாராட்டு.



