தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ மைதானத்தில் தஞ்சாாவூர் மாவட்ட, மாநகர, மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தியும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை யொட்டி மாராத்தான் போட்டி தொடங்கியது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு, புண்ணிய மூர்த்தி, மனேகரன், சதீஸ்குமார். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை முன்னாள் உணவு துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான ஆர்.காமராஜ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கொள்கை பரப்பு செயலாளர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசாமி ,துரை.திருஞானம்,
அமைப்பு செயலாளர் ஆர்.காந்தி, எம்ஜிஆர் மன்ற இதனை செயலாளர் துரை.வீரணன்,
விவசாய பிரிவு துணை செயலாளர் சிங்.ஜெகதீசன் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிங்.ஜெ. முருகானந்தம் மருத்துவர் பிரிவு இணை செயலாளர் துரை.கோ.கருணநிதி, மாவட்டபொருளாளர் அன்பு செல்வன் மாவட்ட துணைச் செயலாளர் வெண்ணிலா பாலை ரவி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் அறிவொளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டி நடந்தது.ஆண்கள் பிரிவினருக்கு 5கிலோமீட்டரும், பெண்கள் பிரிவினருக்கு 4கிலோமீட்டரும் தொலைவிலாண மாரத்தான் போட்டி நடைபெற்றது.
முதல் பரி சாக ரூ15ஆயிரம், 2வது பரிசாக ரூ.10000 ஆயிரம். 3வது பரிசாக 5000ஆயிரம் 4முதல் 20வரை1000மும், கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட் டது . மருத்துவர் பிரிவு செயலாளர் கோ.கருணாநிதி. பகுதி செயலாளர்கள் கரந்தை பஞ்சு மனோகரன் சதீஷ்குமார், புண்ணியமூர்த்தி ,தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் நடராஜன் ,மாவட்ட செயலாளர் விக்னேஸ்வரன், சித்ரா தங்கப்பன்,துரை.பாண்டி, மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான வழக்கறிஞர் கண்ணுக்கினியாள், பாலை ரவி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், கவிதா கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர் . ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் நன்றி கூறினார்.



