மதுரை மே 05
திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரி மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1300 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான
நீட் தேர்வு எழுதும் இரண்டு மையங்களிலும் பலத்த போலீசார் பாதுகாப்பு
ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
2025 -26 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு எழுதுவதற்காக
திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட மன்னர் திருமலை கல்லூரியில் 580 மாணவர்களும் திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 720 மாணவர்களும் மொத்தம் 1300 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
நீட் தேர்வு நடைபெறுவதை ஒட்டி மன்னர் கல்லூரி வளாகம் மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி வளாகம் ஆகியவற்றில் பலத்த போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதனை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.