நாகர்கோவில் ஏப். 30
நாகர்கோவில் கோட்டார் ரயில்வே ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் (28ம் தேதி) மதியம் முத முதியவர் இறந்து கிடந்தார். முதலில் அவர் போதையில் கிடப்பதாக நினைத்துக் கொண்டனர். நீண்ட நேரமாக அசைவின்றி இருந்ததால் பரிசோதனை செய்தபோதுதான் அவர் இறந்தது தெரிய வந்தது.
உடனடியாக இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம் (62) என்பது தெரியவந்தது. ஆட்டோ டிரைவரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் தான் அந்தோணி செல்வம் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.