பரமக்குடி நகராட்சியில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு
தொழிலாளர் அரசு ஈட்டுருதி மருந்தகம் மற்றும் எக்ஸர் நெட் மதுரை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார் , முன்னதாக
நகராட்சி ஒப்பந்ததாரர் பழ சரவணன் வரவேற்றார்.
துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தார். இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு இரத்தம்,சக்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது இருதயம்,பொது மருத்துவம் இயல் மருத்துவம் என பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.முகாமில் மருத்துவர் விக்னேஷ்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜீவரத்தினம், துர்கா, கவிதா , சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியில் நகராட்சி ஒப்பந்ததாரர் முனியசாமி நன்றி கூறினார்.
பட விளக்கம் பரமக்குடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஈட்டுருதி மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.