சென்னை ஏப்ரல் 22
சோழிங்கநல்லூரில் 6வயது சிறுவன் ஒரு மணி நேரம் தொடர்ந்து முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை படைத்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் சங்கர்- பவித்ரா தம்பதியின் மகன் க்ரிஷவ் ஸ்ரீ சங்கர் சோழிங்கநல்லூரில் உள்ள ஆர். ஸ்கூலில் யூ.கே.ஜி பயின்று வருகின்றார். தனது 6 வயதிலும் க்ரிஷவ் ஸ்ரீ சங்கர் என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக யோகா கற்று வருகின்றார். இந்தநிலையில் யோகாவில் சாதனை படைக்க விரும்பிய சிறுவன் பரிவர்த்த பத்மாசனம் என்ணும் யோகாவை ஒரு மணி நேரம் இடைவீடாது முட்டை மீது அமர்ந்து செய்து அசத்தினார்.
யு.கே.ஜி மாணவனின் இந்த திறமையை நோவா வேல்டு புக் ரெக்கார்ட்ஸ் உலகசாதனையாக அங்கரித்தது. இதனையடுத்து மாணவன் க்ரிஷவ் ஸ்ரீ சங்கருக்கு உலகசாதனை சான்றிதழ் மற்றும் பதக்கத்தை நோவா புக் ரெக்கார்ஸ் இந்திய இயக்குனர் திலிபன், நடுவர் பாலகிருஷ்ணன்வேல் ஆகியோர் வழங்கி கவுரவித்தார். சிறுவனின் உலகசாதனையை பென் ஆண்ட் பென்சில் குரூப் ஆப் ப்ரி ஸ்கூல் பள்ளி முதல்வர் ரம்யா பாராட்டி பரிசளித்தனர்.