கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் லிமிடெட் யூனிட் 1,2 நிறுவனத்தின் கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதியின் மூலம் (CSR)03.04.2025 கல்லாவி காவல் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் தலா 1,121,953(பதினொன்று லட்சத்து இருபது ஒன்று ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது மூன்று ) வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், மேலும் செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக சேவை மற்றும் செயல்பாட்டு பொது மேலாளர் திரு மணிமாறன் அருணாச்சலம், நிர்வாக பொது மேலாளர் திரு அருள் மகாவிஷ்ணு, துணை பொது மேலாளர் திரு முத்துவேல் பன்னீர்செல்வம்,ஃபேர்வே எண்டர்பிரைசஸ் கம்பெனி லிமிடெட் யூனிட் 1,2 நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஜெயராஜ் பாபு, வெல்பேர் (welfare) அசோசியேசன் உறுப்பினர்கள், காவல் அதிகாரிகள் அதிகாரிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.



