பரமக்குடி,ஏப்.1: பரமக்குடி வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை.
பரமக்குடி வைகை ஆற்று பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் தலைசுமையாக கரையோரங்களில் மணல் அள்ளுவதால், வைகை ஆற்றின் கரையோரங்களில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில்,நேற்று மாலை கள்ளிக்கோட்டை கிராம பகுதியில் உள்ள வைகை ஆற்றில்,அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பரமக்குடி தாலுகா காவல் நிலையத்திற்கு வந்தா தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தண்ணீர் மூழ்கிய நிலையிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைபற்றி பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்,இவர் குறித்த தகவல் கிடைத்தால், காவல் ஆய்வாளர் 9498184666, காவல் நிலைய எண்க்கு 94981061643
தகவல் தெரிவிக்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
படம்.
பரமக்குடி வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்