மும்பையில் உள்ள நியாயமான வணிக நடைமுறைகள் கவுன்சில் அமைப்பு தேசிய அளவில் நியாயமான வணிக நடைமுறைகளை கடைப்பிடித்தமைக்காக, சக்தி மசாலா நிறுவனத்திற்கு 2024-25 ம் ஆண்டுக்கான ஜம்னாலால் பஜாஜ் தேசிய விருதை வழங்கியது. விருதை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த், சக்தி மசாலா நிறுவனர்கள் எச்.சி.துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் செல்வன் செங்கதிர் வேலன் ஆகியோரிடம் வழங்கினார்.



