மதுரை மார்ச் 22,
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக அதிக அளவில் வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை ஆஜர்படுத்தி அதிக வழக்குகளை முடித்ததற்காக மதுரை மாநகர திருப்பரங்குன்றம் காவல் நிலையம், செல்லூர் காவல்நிலையம் மற்றும் தெப்பக்குளம் காவல்நிலைய காவல் அதிகாரிகளுக்கு மாநகரகாவல் ஆணையர் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு, போக்குவரத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.