திருப்புவனம்: மார்ச்:18
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பழையூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவானது வருடாவருடம் பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்வகையில் பள்ளியின் 62 வது ஆண்டு விழாவானது பல்வேறு
போட்டிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையிலும் வட்டாரக்கல்வி
அலுவலர்கள் லதாதேவி மற்றும் பால்பாண்டி, வட்டார வளர்மைய அலுவலர் ( பொறுப்பு )ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலையிலும்
நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த. சேங்கைமாறன் , முன்னாள் சேர்மன் வசந்தி சேங்கைமாறன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சித்ராதேவி ஆறுமுகம், வேல்பாண்டி, உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.