ஆரல்வாய்மொழி மார்ச் 4
இது குறித்து முன்னாள் அமைச்சர் என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை.
அரசு அலுவலர்களை முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் தூண்டிவிட்டு கட்டாயப்படுத்தி இலக்கு நிர்ணயித்து புத்தகம் வாங்க வசூலிக்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மூலம் ரூ. 60 இலட்சத்திற்கும், பொதுமக்கள் மூலம் ரூ. 40 இலட்சத்திற்கும் ஆக மொத்தம் ரூ. 1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு பேரூராட்சி அலுவலருக்கும் ரூ. 40 ஆயிரம் வீதம் 51 பேரூராட்சிக்களுக்கு ரூ. 20 இலட்சத்து 40 ஆயிரம் இலக்கு நிர்ணியிக்கப்பட்டு கட்டாய படுத்தப்பட்டுள்ளது உள்ளனர்.
தாசில்தார்களுக்கு ரூ. 5 இலட்சம் வீதமும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் போன்ற பல்வேறு துறை அலுவர்களுக்கு புத்தகம் வாங்க இலக்கு நிர்ணய்த்து வசூலிக்க கட்டாயப்படுத்தப்பட்டு வசூல் செய்துள்ளார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.