மதுரை பிப்ரவரி 25,
மதுரை மாநகராட்சி செனாய் நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தில்
கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து
மதுரையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனி வேல் தியாகராஜன் குத்து விளக்கு ஏற்றி வைத்து மருந்தகத்தை பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர உடன் உள்ளனர்