குளச்சல், பிப்- 23
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தமிழகம், கேரளா பகுதி பக்தர்கள் தினம் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர். இந்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்கள் ஆகிய கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பின் நேற்று திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடந்தது.
குமரிமாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையாளர் பழனிகுமார், உதவியாளர் தங்கம், பத்மநாதபுரம் தேவஸ்தான தொகுதி கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ. 29.50 லட்சம் ரொக்கமாகவும், 42.54 கிராம் தங்கம், 75 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.