தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அரசு மேல்நிலை பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா – 100%தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 92% தேர்ச்சியும் ப்ளஸ் 2 தேர்வில் 96% தேர்ச்சியும் பெற்ற அரசு பள்ளி இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% வெற்றி பெறம் இலக்கை நோக்கி செல்வதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 600 மாணவர்களும், 680 மாணவிகளும் என மொத்தம் 1280 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அமலாதங்கத்தாய், ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாவதி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேல், துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகளை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
மேலும் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.
விழாவின் முடிவில் பள்ளி முதுகலை ஆசிரியர் ராமையா நன்றி கூறினார்.



