ஆரல்வாய்மொழி, ஜன.25:தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்
நாகர்கோவில் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா மிகவும் விமர்சையாக தொடங்கியது இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தேசியக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், நூற்றாண்டு விழா ஒளிச்சுடர் ஏற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சியும் தொடர்ந்து நூற்றாண்டு விழா பலூன் பறக்க விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா பானுமதி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்குகினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி முன்னோடி மாணவர்களின் எழுச்சி உரையும் இடையிடையே தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதிய விருந்தும் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பெருமக்களை கௌரவித்தல் நிகழ்ச்சியும், இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரிய பெருமக்களை கௌரவித்த நிகழ்ச்சியும், இப்பள்ளியில் பயின்று 80 வயது கடந்த முன்னாள் மூத்த மாணவர்களை கௌரவித்தலும்,இப்பள்ளிக்கூடம் அமைவதற்கு இடம் வழங்கிய குடும்பத்தினரை கௌரவித்தல் நிகழ்ச்சியும், பள்ளியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கௌரவித்த நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளி முன்னோடி மாணவர்களின் எழுச்சி உரையும் வாழ்த்துரையும் நடைபெறுகிறது. மாலையில் நடைபெறுகின்ற இச்சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை வழங்குகிறார் தொடர்ந்து இரவு 7:45 மணிக்கு லேசர் ஒளியுடன் கூடிய கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய பெருமக்களும், பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கமும், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் செய்து வருகின்றனர்