கோவை ஜன:22
கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலை, பகுதியில் தாட்கோ எதிரே சாரா டவர்சில், அட்வென்ச்சர் ஷாப் என்னும் இருசக்கர வாகனத்திற்கான ரைடிங் கியர்ஸ் ஷோரூம், தற்போது புதுப்பிக்கப்பட்டு ரைடர்ஸ் ரேன்ச் என்னும் பெயரில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த ரைடர் குரு சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டு ரைடர்ஸ் ரேன்ச் ஷோரூமை திறந்து வைத்தார். இங்கு இருசக்கர வாகனத்திற்கான உபகரணங்கள்,
மற்றும் ஓட்டுநர்களுக்கான ரைடிங் கியர்ஸ் என்று இரண்டு பிரிவுகளாக, இரண்டு இடத்தில் மேன் அண்ட் மிசின், என்னும் கான்செப்டில் துவங்கப்பட்டுள்ளது டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள ரைடர்ஸ் ரேன்சில் என்னும் இருசக்கர உபகரணங்களும்,ஜி கே.டி நகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள, ரைடர்ஸ் ரேன்சில் ஓட்டுநர்களுக்கான ரைடிங் கியர்ஸ், துவங்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவை முன்னிட்டு, ஜனவரி 20 முதல் 25 வரை,சில பொருட்களுக்கு சிறப்பு சலுகையாக, 30% வரை தள்ளுபடி விற்பனை, துவங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ரைடர்ஸ் ரேன்ச் ஷோரூம் இயக்குனர்களான,பிரேமலதா சிவகுமார் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூறியதாவது இங்கு சுமார் 16 வருடங்களாக இருசக்கர வாகனத்திற்கான பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் ஓட்டுனருக்கான உடைமைகள், மற்றும் மழையேற்றம், வனவிலங்கு மேலாண்மை உபகரணங்கள், விற்பனை செய்து வருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம், என்றனர்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள்,ரைடர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.