திருப்பத்தூர்:ஜன:22,
ஆய்வுக்கட்டுரை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளி தலைமை ஆசிரியர் கி.சீனிவாசன் ஆய்வுக் கட்டுரை சமர்பித்ததை பாராட்டிய திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன்.
புதுடெல்லி,தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் மற்றும் பள்ளி தலைமைத்துவத்திற்கான தேசிய மையத்தின் சார்பாக புதிடெல்லியில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கல்வியில் மாற்றம் மற்றும் புதுமைகளைப் படைத்திடும் முன்மாதிரித் தலைமை என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 55 தலைமையாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அக்கருத்தரங்கில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்க ஆம்பூர் இந்து நிதியுதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர். கி.சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 08.01.2025 முதல் 10.01.2025 வரை நடைப்பெற்ற கருத்தரங்கில் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.அங்கு வழங்கிய சான்றிதழை (20.01.2025) திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மலைவாசன் ஐயா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். வட்டார கல்வி அலுவலர்கள்.சுரேஷ் அவர்கள்,.முருகேசனபீட்டர் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினர்.