கிருஷ்ணகிரி ஜன 18:
கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிகாட்டுதலின்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.சின்னராஜ் தலைமையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கும், காவேரிப்பட்டணத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர்களான முருகன், வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, ஒன்றிய பொருளாளர் பி.சி.கனகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் முருகேசன், ஒன்றிய அவை தலைவர் கே.எஸ்.காளியப்பன், வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர்களான ரஞ்சித்குமார், காதர், வேலு, IT WINGகிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்களான பி.சி.குமார், சுந்தரேசன், அதிரடிபிரபு, பூங்கொடிகிருஷ்ணன், காமராஜ், கணேசன், முருகன், சுந்தரம், திருநாவுக்கரசு, ஐ.டி.விங் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், பாலாஜி, அன்வர், ரவி, சண்முகம், அமிர்தலிங்கம், சின்னையன், ஆர்மிசண்முகம், அன்பு, மூர்த்தி, மாது, சக்திவேல், சசிகுமார், துரை, உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு எம்ஜிஆருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.