தஞ்சாவூர் ஜன.6.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 6.62 கோடியில்கட்டப்பட்டுள்ள புதிய அரசு கட்டிடங்களை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் மதுக்கூர் பட்டுக்கோட்டை பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம்ஆகிய ஒன்றியங்களில் ரூபாய் 6 கோடியே 62 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில். பல்வேறு துறை சார்ந்த அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார் .முரசொலி எம்பி எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் அண்ணாதுரை ,அசோக்குமார் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:
கிராமப்புறங்களில் மேம்பாடு பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்தி உள்ளது அங்கன்வாடி மையக் கட்டிடம், பொது விநியோகத் திட்ட கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கிராம செயலக கட்டிடம் ,நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் போன்ற புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் இது போன்ற திட்டங்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா, ஜெயஸ்ரீ ,ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் பார்வதி சிவசங்கர், முத்து மாணிக்கம் தாசிதார்கள் சுந்தர் செல்வி, பாக்கியராஜ் ,தெய்வானை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்