தென்தாமரைகுளம்., டிச. 26.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்திற்கு உட்பட்ட எங்கோடிகண்டன் சாஸ்தா திருக்கோயிலில் இன்று வியாழக்கிழமை மண்டல பூஜைவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம்,7.30 மணிக்குஅபிஷேகம்,8.15 மணிக்கு
சிறப்பு தீபாராதனை,10 மணிக்கு
பஜனையும்,நண்பகல் 12 மணிக்கு
சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை,
மாலை 4.30 மணிக்கு எங்கோடி கண்டன் சாஸ்தா கஜவாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதலும்,
இரவு 7 மணிக்குபஜனை,
8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை,
8.30 மணிக்கு ஆழி பூஜை, 9.30 மணிக்குபிரசாதம் (சிற்றுண்டி) வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்துவருகின்றனர்.