வேலூர் 08
வேலூர் மாவட்டம் ,வேலூர் பில்டர்பெட்ரோடு ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற சுயாதீன திருச்சபைகள் பேராயம் நடத்திய வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்கள் சுயாதீன திருச்சபைகள் பேராயம் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எம் .காலேப் கண்ணதாசன், செயலாளர் டாக்டர் பி .வின்சன் சாமுவேல் ,பொது செயலாளர் டாக்டர் ரபிநேசன் ,துணைத் தலைவர் எஸ் .குட்டிசாமுவேல் , இசை மாநில தலைவர். எஸ் ஜார்ஜ் , துணைச் செயலாளர் பேராயர் எஸ் .யாக்கோபு, ஆகியோர் வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களை சிறப்பிக்கும் வகையில் சான்றிதழ்களும், பரிசுகளும் ,வழங்கினர் உடன் வாலிபர் குழு தலைவர்கள் பெரிய தெள்ளூர் எம். நந்தகுமார், நெல்வாய் பி. அன்பு குமார், ஆர் .பவன் குமார் ,சத்துவாச்சாரி ஜி. ஜான் ரூபன்தாஸ், வேலூர் ஜேக்ஜோசப் ராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். வாலிபர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இன்னிசையுடன் தனி பாடல்கள், குழு நடனம் குழு நாடகம், தேவசெய்தி, ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.