துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் அ.இளையராஜா பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட சுப்பிரமணிய புரம் குளத்துக் கரையில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலை திட்ட வட்டாட்சியர் எஸ்.செல்வகுமார் தலைமையில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், கால்நடைதுறை ஆய்வாளர் (ஓய்வு) சுப்பிரமணியன், மகி அறக்கட்டளை இயக்குநர் பி.முத்துமாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் வரவேற்றுப் பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான அ.இளையராஜா கலந்து கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 1047 பனை விதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்து ,இயற்கையை பாதுகாப்பதிலும், நீர் நிலைகளை பாதுகாப்பதிலும்
தமிழக அரசும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பது விளக்கவுரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு இயற்கை ஆர்வலர் த.காசிங்ராஜ், துளசி டிரஸ்ட் இயக்குநர் எஸ்.தனலட்சுமி நியூ பாசக்கரங்கள் முத்துப்பாண்டியன், சுடர் அறக்கட்டளை ஜி.விஜயசாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பு
பணிகளை பணித்தள பொருப்பாளர்
டி.கலையரசி செய்து இருந்தார். மற்றும் கிராம பொதுமக்களும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிறைவாக ஊராட்சி செயலர் செல்வி நன்றியுரை கூறினார்.