பரமக்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் டேவிட் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு புத்தாடைகளை கொடுத்து அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் கருப்பையா, உதயநிதி ஸ்டாலின் மன்ற பொறுப்பாளர் துரைமுருகன்,மாவட்ட கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அமிர்தவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



