திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்ற வளாகம் முன்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47- வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எல்.சுந்தரமூர்த்தி தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் திமுக.வின் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி ,நத்தம் நீதிமன்ற வழக்கறிஞர் அணி அமைப்பாளரும் நத்தம் பேரூராட்சி கவுன்சிலர் வழக்கறிஞர் இஸ்மாயில், நீதிமன்ற தலைவர் ராஜ்குமார், துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன்,செல்லமணி உள்ளிட்ட திமுக.வை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



