தென்தாமரைகுளம்,நவ.25-
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நாகர்கோவில் ஜோசப் சகாயம் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி இணைந்து முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .
முகாமினை தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் .முகாமில் பக்கவாதம் , சிறுநீரக சிகிச்சை,பித்தப்பை ,கர்ப்பப்பை கட்டிகள் ,கிட்னி கல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர் .இதில் பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா ,திமுக நிர்வாகி தாமரை பிரதாப் உட்பட பல பங்கேற்றனர்